மிஸ்டர் கழுகு: தளபதி Vs தளபதி - கோபபுரம் ஆன கோபாலபுரம்!

‘‘இப்போதெல்லாம் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால், ‘ரஜினிக்கு ஓட்டுப் போடுவாயா?’ என்றுதான் விவாதித்துக்கொள்கிறார்கள்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் நடந்த சுவாரஸ்யங்கள், நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களுடன் ரஜினி நடத்திய கலந்துரையாடல், கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியுடனான ரஜினியின் சந்திப்பு என அனைத்தையும் கவர் செய்துவிட்டு வந்திருந்தார் அவர்.

‘‘தி.மு.க தலைவர் கருணாநிதியை ரஜினி சந்தித்ததில் என்ன விசேஷம்?’’ என்றோம்.

‘‘கருணாநிதியுடனான ரஜினியின் சந்திப்பு, ‘மரியாதை நிமித்தமானது’ என்று சொல்லப்பட்டது. ஆனால், அந்த விவகாரம் பூமராங்காக மாறிவிட்டது. அந்த நிகழ்வு இரண்டு விஷயங்களை உணர்த்திவிட்டது. ஒன்று, ‘அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அரசியல்வாதிக்கான அனைத்துத் தகுதிகளையும் ரஜினி அடைந்து விட்டார்’ என்பது. மற்றொன்று, ‘நல்ல நண்பர்களாக இருந்த மு.க.ஸ்டாலினும் ரஜினியும் அரசியல் எதிரிகளாக உருமாறத் தொடங்கி யுள்ளனர்’ என்பது.’’

‘‘அப்படியா... அந்த அளவுக்கு என்ன நடந்தது?’’

‘‘நான் சொல்வதை வரிசையாகக் கேளும். அப்போதுதான், அந்த விவகாரத்தின் பின்னால் இருக்கும் அரசியல் புரியவரும். ஜனவரி 2-ம் தேதி, கருணாநிதியைச் சந்திக்க ரஜினி தரப்பிலிருந்து அப்பாயின்ட்மென்ட் கேட்கப்பட்டது. அதை ரஜினி தரப்பு மு.க.ஸ்டாலினிடம் முதலில் கேட்கவில்லை. நேரடியாக, கோபாலபுரத்தைத் தொடர்பு கொண்டு கேட்டனர். அந்தப் புள்ளியிலேயே ரஜினிகாந்த் அரசியல்வாதியாக தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தார்.’’

‘‘ஆரம்பமே விவகாரமாக இருக்கிறதே?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick