500 ரூபாய்க்கு ஆதார் விவரங்கள்! - அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்

தாரத்தின் அடிமடியிலேயே கைவைத்த சம்பவம் இந்தியாவையே கலக்கிக்கொண்டிருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆதார் அட்டை விவரங்கள் பாதுகாக்கப்படுவதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால், பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெறும் 500 ரூபாய் செலவில் ஆதார் ஆணைய (UIDAI) இணையதளத்தில் உள்ள லட்சக்கணக்கானவர்களின் ஆதார் தகவல்களைப் பார்வையிட்டு, ஆதார் அட்டைகளை பிரின்ட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வசிக்கும் ரச்னா கைரா.

‘தி ட்ரிப்யூன்’ நாளிதழில் பணிபுரியும் அவரிடம் பேசினோம். ‘‘மோசடிக் கும்பல் ஒன்று கடந்த ஆறு மாதங்களாக ஆதார் தகவல்களை விற்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே விசாரணையில் இறங்கி அந்தக் கும்பலின் மொபைல் எண்ணைப் பெற்றேன். அந்தக் கும்பலைச் சேர்ந்த அனில்குமாரின் எண் அது. ‘எனக்குச் சில ஆதார் அட்டைகளின் தகவல்கள் தேவைப்படுகின்றன’ என அந்த மொபைல் நம்பருக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்