உறுப்பினர் சேர்க்கும் ரஜினி படை!

டிஜிட்டல் வேன்... ஐ.டி டீம்...

‘இணையதளத்தில் சேரச் சொன்னால், எத்தனை பேர் சேரமுடியும்’ என ரஜினிகாந்த்தின் ரசிகர்களைத் திரட்டும் அரசியல் முயற்சி பற்றி பலர் விமர்சனம் செய்தார்கள். ஆனால், ரஜினிக்காக இதைச் செய்யக் களமிறங்கியுள்ளது ஐ.டி டீம் ஒன்று.

வைஃபை வசதி, எல்.இ.டி டி.வி, மடிக்கணினிகள், பவர் சார்ஜர்கள், ஐபேடுகள், ஆண்ட்ராய்டு போன்கள் என ஹைடெக் வசதிகள் கொண்ட டிஜிட்டல் டெம்போ டிராவல் வேனில், கார்த்திக் என்பவர் தலைமையில் எட்டு பேர் கொண்ட டீம் ஒன்று ஜனவரி 6-ம் தேதி கரூர் வந்தது. கரூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ராஜா தலைமையில் சீனிவாசபுரம், வெங்கமேடு, அரசு காலனி, தாந்தோன்றிமலை, வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்பட ஏழு இடங்களில் நாள்முழுக்க உறுப்பினர்களைச் சேர்த்தது. 18 வயது நிரம்பிய ஓட்டுரிமை உள்ள உறுப்பினர்களிடம், வாக்காளர் அடையாள அட்டை நகலை வாங்கி, அமைப்பின் இணையதளத்தில் பதிவு செய்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்