விகடன் லென்ஸ்: தொகுதிக்குச் செலவழிக்காமல் ஆபீஸுக்கு எடுத்துக்கொண்டார்கள்! | Vikatan lens - MLA Constituency Development Fund - Junior Vikatan | ஜூனியர் விகடன்

விகடன் லென்ஸ்: தொகுதிக்குச் செலவழிக்காமல் ஆபீஸுக்கு எடுத்துக்கொண்டார்கள்!

எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் உண்மை நிலை

நிழற்குடை, பள்ளிக்கட்டடம், நீர்த்தேக்கத் தொட்டி என சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செய்யப்படும் வளர்ச்சிப்பணிகளைத்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அந்த நிதியில் பல எம்.எல்.ஏ-க்கள் தங்கள் அலுவலகத்தை மேம்படுத்திக்கொண்ட கதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘2011-2012-ம் நிதியாண்டில், இந்த நிதியில் தங்கள் அலுவலகங்களுக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த செலவுகள் என்னென்ன’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்றோம். கம்ப்யூட்டர், லேப்டாப், பிரின்டர், இணைய வசதி என லட்சங்களில் கணக்கு கொடுக்கப்பட்டது. கிடைத்த தகவல்களைக் கையில் வைத்துக்கொண்டு, தேனி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு விசிட் செய்தோம்.

பெரியகுளம், கம்பம், ஆண்டிபட்டி, போடி எனத் தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள். போடி தொகுதி எம்.எல்.ஏ., துணை முதல்வர் பன்னீர்செல்வம். கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன். ஆண்டிபட்டி தொகுதி தங்க தமிழ்ச்செல்வனும், பெரியகுளம் தொகுதி கதிர்காமு வும் தினகரன் பக்கம் போனதால் தகுதிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். அதனால், இவர்கள் இருவரின் அலுவலகங்களும் பூட்டுப்போடப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick