“ஆளும்கட்சியை ஜெயிக்க வைக்க வார்டுகளை மாற்றுகிறார்கள்!” | Will Panjayat Election postponed again? - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“ஆளும்கட்சியை ஜெயிக்க வைக்க வார்டுகளை மாற்றுகிறார்கள்!”

மீண்டும் தள்ளிப்போகுமா உள்ளாட்சித் தேர்தல்?

நீதிமன்றத்தில் பல சாக்குப்போக்குகளைச் சொல்லி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தட்டிக்கழித்துவந்த தமிழக அரசு, 2017 ஜூலை மாதம், வார்டுகளை மறுவரையறை செய்வதற்கான ஆணையத்தை அமைத்தது. மாநகராட்சி முதல் ஊராட்சி வரை தமிழகம் முழுக்க அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளும் மறுவரையறை செய்யப் பட்டன. அதற்கான பணிகள் அவசரகதியில் நடப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் வரைவுப் பட்டியல்கள் டிசம்பர் 27-ம் தேதி வெளியிடப்பட்டதாகத் தகவல் வெளியானது. ‘அந்தந்த உள்ளாட்சி அமைப்பு களின் அலுவலகங்களில் வரைவுப்பட்டியல் வைக்கப்பட்டிருக்கும்; பட்டியலில் ஆட்சேபம் இருந்தால் ஜனவரி 2-க்குள் தெரிவிக்கலாம்’ என்று செய்திகள் வெளியாகின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick