முகாமில் 33 யானைகள்... காட்டுக்குள் கணக்கில்லா யானைகள்! | People fear for Thekkampatti Elephant Camp - Junior Vikatan | ஜூனியர் விகடன்

முகாமில் 33 யானைகள்... காட்டுக்குள் கணக்கில்லா யானைகள்!

திக் திக் தேக்கம்பட்டி

வ்வோர் ஆண்டும் யானைகள் நலவாழ்வு முகாம் ஆரம்பித்துவிட்டால், சந்தோஷத்துக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவிருக்காது. இந்த வருடமும் அப்படியே! முகாமில் குதூகல கும்மாளம் போடுகின்றன கோயில் யானைகள். அதை வியந்து வேடிக்கைப் பார்க்கவேண்டிய தேக்கம்பட்டி கிராமத்து மக்களோ, வேதனையில் துடிக்கிறார்கள்.

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் ஜனவரி 4-ம் தேதி தொடங்கிய யானைகள் நலவாழ்வு முகாமில், புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டு யானைகள் உள்பட தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 33 யானைகள் கலந்துகொண்டுள்ளன. 48 நாள்கள் நடக்க இருக்கும் இந்த முகாமை, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை நடத்துகிறது. 2003-ம் ஆண்டுக்குப் பிறகு, அ.தி.மு.க ஆட்சியில் தவிர்க்க முடியாத நிகழ்வாகிவிட்டது இந்த முகாம். 2003-ல் முதுமலையில் முதன்முதலாக யானைகள் முகாம் ஆரம்பிக்கப்பட்டபோதே எக்கச்சக்க சர்ச்சைகள். ‘ஜோசியர்கள் சொல்லித்தான் கோயில் யானைகளுக்கு ஜெயலலிதா முகாம் நடத்துகிறார்’ என்பதில் ஆரம்பித்து, ‘கோயில் யானைகளால் காட்டுயானைகளுக்குத் தொற்று நோய்கள் ஏற்படும்’ என்பதுவரை பல்வேறு எதிர்ப்புகள். இப்போதுவரை இந்த முகாமுக்கு ஏதாவதொரு ரூபத்தில் எதிர்ப்பு எழுந்தபடி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick