தீர்ப்புக்கு உதவிய உண்மைகள் - ஜூ.வி-யுடன் நாங்கள் | Justice Chandru share Junior Vikatan memories | ஜூனியர் விகடன்

தீர்ப்புக்கு உதவிய உண்மைகள் - ஜூ.வி-யுடன் நாங்கள்

நீதிநாயகம் சந்துரு

டகங்களை ‘ஜனநாயகத்தின் நான்காவது தூண்’ என்று கூறுவதுண்டு. ‘போர்வாளை விட பேனாவின் முனை கூர்மையானது’ என்றும் கூறுவார்கள். இக்கூற்றுக்களை தமிழகத்தில் மெய்ப்படுத்திக் காட்டியது ‘ஜூனியர் விகடன்’. தமிழக மக்களின் அவலங்களைப் படம்பிடித்துக் காட்டியதுடன், அதிகாரமட்டங்களின் கூத்துகளையும் ஜூனியர் விகடன் அம்பலப்படுத்தியதன் விளைவாக, தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றின் பட்டியல் நீளமானது. கடந்த 30 ஆண்டுகளில் ஜூ.வி நடத்திய ‘துல்லிய தாக்குதல்களால்’ அதிகாரத்தின் முகமூடிகள் பலமுறை கிழிந்து தொங்கின. அதைவிட, பொதுவான சமூகப் பார்வையைப் பலப்படுத்த ஜூ.வி எடுத்த முயற்சிகள் சிறப்பானவை.

ஜூ.வி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை அதன் ஆசிரியர் குழுவுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்துவருகிறது. முதலில் இந்த இதழின் சட்ட ஆலோசகராக இருந்தேன். ஜூனியர் விகடனின் முன்னாள் ஆசிரியர் திரு.பாலசுப்ரமணியன் பொதுநல வழக்குகள் சிலவற்றைத் தொடர்ந்தபோது, அவற்றில் வாதாடி வெற்றிபெறும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. ‘ஆர்டர்... ஆர்டர்’ என்ற தொடரை நான் எழுதுவதற்கு ஜூ.வி களம் அமைத்துக் கொடுத்தது. அந்தத் தொடரில், சட்ட உலகத்தைப் பற்றியும், நீதிமன்றங்களைப் பற்றியும் நான் எழுதியதற்கு நீதித்துறையி லிருந்து கடுமையான எதிர்வினைகள் வந்தன. ஆனால், மக்களிடம் அந்தத் தொடர் பரவலான வரவேற்பைப் பெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick