மணல் சர்ச்சை 1: மீண்டும் மணல் கொள்ளையில் ஓ.பி.எஸ் தம்பி!

திகாலையில் தேனி மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு வெளியே செல்கின்றன. தமிழகம் முழுவதும் ஆற்றுப்படுகையில் மணல் அள்ள தடை விதிக்கப் பட்ட சூழலில், இவ்வளவு மணல் எங்கிருந்து செல்கிறது? விசாரித்தபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

இயற்கையாகவே மலைகள் சூழந்த பகுதி தேனி மாவட்டம். மேற்குத்தொடர்ச்சி மலையில் வீசும் காற்றில் அடித்துவரப்படும் மணல், பொட்டிபுரம், தேவாரம் மற்றும் வருசநாடு பகுதிகளுக்கு வந்து சேரும். இதை, ‘தூசி மணல்’ அல்லது ‘காற்றடி மணல்’ என்பார்கள். ‘‘பல ஆண்டுகளாக காற்றில் அடித்துவந்து ஓர் இடத்தில் படிந்துகிடக்கும் இந்த தூசி மணலை எடுக்கவோ, விற்பனை செய்யவோ எந்தத் தடையும் இல்லை. இதை அகற்றுவதாகச் சொல்லி, மணல் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். லாரிகளில் கொண்டுசெல்லப்படுவது, தூசி மணலைப் போலவே இருக்கும். உண்மையில் அது, வழக்கமான ஆற்றுமணல்தான். பொதுவாக, குறிப்பிட்ட அளவு மட்டுமே இந்த தூசி மணல் நிலத்தில் படிந்திருக்கும். அதற்குக் கீழே, சாதாரண பெரிய மணல் இருக்கும். இதையே இப்போது கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். தேனி மாவட்டம் முழுவதும் இந்தக் கொள்ளை 11 இடங்களில் நடக்கிறது. ‘யார் யாரெல்லாம் தேனி மாவட்டத்தில் மணல் அள்ளிக் கொண்டிருக்கி றார்கள்’ என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் நான் கேட்டபோது, ‘யாரும் மணல் அள்ளவில்லை’ என்று பதில் கொடுத்தார்கள். ஆனால், பட்டா நிலத்தில் மணல் அள்ளுவதற்காக பாஸ் வழங்கப் பட்டுள்ளது. இப்படியே சென்றுகொண்டிருந்தால் தேனி மாவட்டத்தின் நிலத்தடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகிவிடும்’’ என்று கொதிக்கிறார் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஜெயபால்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்