நினைச்சா ஒரு கல்யாணம்! - போலீஸ் தேடும் 57 வயது மாப்பிள்ளை

‘அம்பது வயசுக்குமேல ஒரு ஆள் இப்படியெல்லாம் செய்வானா?’

‘இவ்வளவு படிச்சிருந்தும் எப்படி இந்தப் பொண்ணுங்க ஏமாந்துச்சுங்க?’

‘இதுக்கு, மேட்ரிமோனிகாரன்தான் முக்கியக் காரணமா இருக்கணும்...’

‘காலேஜ் படிக்கிற அந்த ஆளோட மகளும் இதுக்கு உடந்தையாமே?’

- இப்படியாக ‘கல்யாண மன்னன்’ புருஷோத்தமனின் லீலைகளைக் கேள்விப்படும் ஒவ்வொருவரும் தங்கள் ஆதங்கத்தையும், கோபத்தையும், ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருக்கு 57 வயது ஆகிறது. இவர், ‘இரண்டாவது திருமணம்’ என்கிற பெயரில் பல பெண்களை ஏமாற்றி, தன் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொண்டு, அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியுள்ளார் என்பது குற்றச்சாட்டு. தலைமறைவாக உள்ள இவரைத் தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்.

இந்த வழக்கை விசாரித்துவரும் புலியகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மசூதா பேகத்திடம் பேசினோம். ‘‘புருஷோத்தமனால் இதுவரை எட்டு பெண்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இன்னும் பல பெண்கள் ஏமாற்றப் பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். புருஷோத்தமன் டிரான்ஸ்போர்ட் தொழிலும், ஃபுட் புராடக்ட்ஸ் ஹோல்சேல் பிசினஸும் செய்கிறார். 78 வயதாகும் தன் அம்மா கமலம் மற்றும் கல்லூரியில் படிக்கும் மகள் கீதாஞ்சலி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்