ஆபத்தான திட்டங்கள் வருகின்றன... லாபம் தரும் அச்சகம் போகிறது!

வேலைவாய்ப்புகளை இழக்கும் தமிழகம்

மிழகம் கேட்காத நியூட்ரினோ திட்டம், மீத்தேன் திட்டம், கெயில் திட்டம் என ஆபத்தான அத்தனை விஷயங்களையும் செயல்படுத்தத் துடிக்கிறது மத்திய அரசு. ஆனால், சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மத்திய அரசு அச்சகத்தை மூடுகிறது.

1964-ம் ஆண்டு, கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் மத்திய அரசு அச்சகம் அமைக்கப்பட்டது. 900 பணியாளர்கள், 463 குடியிருப்புகள் என ஒருகாலத்தில் பரபரப்பாக இருந்த இடம் இது. 132.7 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த அச்சகம், நாட்டில் உள்ள மற்ற அச்சகங்களைவிட இப்போதும் அதிக லாபம் ஈட்டி வருகிறது. அஞ்சல் துறை, தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வருமானவரித் துறை, பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களின் அச்சுத் தேவைகளைப் பூர்த்தி செய்துவரும் இந்த அச்சகத்துக்கு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான ஜாப் ஆர்டர் கைவசம் உள்ளது.

ஆனால், நாட்டில் உள்ள 17 அச்சகங்களை ஐந்தாகக் குறைக்க, 2017 செப்டம்பர் மாதம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி கோவை அச்சகம், கேரள மாநிலம் கொரட்டி அச்சகம், கர்நாடக மாநிலம் மைசூர் அச்சகம் ஆகியவற்றை நாசிக் அச்சகத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால், தென் மாநிலங்களில் எங்குமே மத்திய அரசு அச்சகம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick