விகடன் லென்ஸ்: ஜெ. மரண மர்மம்... மௌனம் கலைப்பார்களா கார்டன் ஊழியர்கள்?

‘அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா எப்படி இருந்தார், அவருக்கு என்ன சிகிச்சை தரப்பட்டது’ என்பதைப் பற்றித்தான் தமிழக அரசு அமைத்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் இப்போது விசாரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கூட்டிச்செல்ல வேண்டிய அளவுக்கு ஜெயலலிதாவுக்கு என்ன நேர்ந்தது என்ற மர்மத்தையும் அறிய வேண்டுமே! போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் இருப்பவர்கள் மனம்திறந்து பேசினால்தான் இந்த மர்மம் வெளியில் வரும்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் சசிகலாவும், இளவரசியும் வசித்துவந்தது பலரும் அறிந்ததுதான். இந்த இருவர் தவிர சமையல்காரர், வாட்ச்மேன், தோட்டக்காரர், அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என வெளியே அதிகம் தெரியாத 15 பேர் அந்த வீட்டில் வசிக்கிறார்கள்; ஜெயலலிதா மறைந்து ஓராண்டு கடந்தும் தொடர்ந்து வசித்துவருகிறார்கள். இளவரசியின் மகன் விவேக், இவர்களுக்கு இப்போதும் மாதாமாதம் சம்பளம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் நிழல்போல இருந்த, அவருடைய தனி பாதுகாப்பு அதிகாரி (பி.எஸ்.ஓ) பெருமாள்சாமி, பி.ஏ. பூங்குன்றன் ஆகியோர்கூட போயஸ் கார்டன் வீட்டில் வசிக்கவில்லை. ஆனால், சாதாரண வேலையாட்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தங்கள் முதலாளி ஜெயலலிதா மரணத்தின் மர்மம் தெரியும் என்பதால், அவர்களை விசாரிக்க முடிவு செய்திருக்கிறது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்