தை மாதம் தனிக்கட்சி! - தினகரன் மாஸ்டர் பிளான்

‘‘கட்சியும் சின்னமும் கைவிட்டுப் போன நிலையிலும், ஆர்.கே. நகர் தேர்தலில் பெற்ற வெற்றி, தினகரனைத் தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவை நோக்கித் தள்ளியுள்ளது’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தன் ஆதரவாளர்களுடனும் சட்ட வல்லுநர்களுடனும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார் தினகரன். அதன் பிறகு, ‘தனிக்கட்சி’ என்ற முடிவுக்கு தினகரன் வந்துவிட்டார்  என்கிறார்கள்.

‘‘அ.தி.மு.க என்ற இயக்கம் எதிர்காலத்தில் எங்கள் கைக்கு வந்துவிடும்’’ - இதுதான் தினகரன் தன் ஆதரவாளர்களிடம் அடிக்கடி சொல்லிவரும் முழக்கம். அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியைத் தினகரனுக்கு சசிகலா வழங்கியதிலிருந்தே, அந்தக் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தினகரனுக்கு வந்துவிட்டது. அதைத் தெரிந்துகொண்டுதான், சசிகலாவின் உறவுகளே தினகரனுக்கு எதிராகத் திரண்டார்கள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் செயல் பட்டார் தினகரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்