கறுப்புப் பூனைப்படை முதல் குருமூர்த்தி வரை! | 6 months extension to Arumugasamy Commission - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கறுப்புப் பூனைப்படை முதல் குருமூர்த்தி வரை!

அவகாசம் வாங்கிய ஆறுமுகசாமி ஆணையம்

றுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘‘ஜெயலலிதாவின் மரண நேரம் குறித்த சர்ச்சை இப்போது எழுந்திருப்பதாலேயே விசாரணை இன்னும் இழுத்துக்கொண்டே செல்கிறது’’ என்கிறார்கள் ஆணையத்தின் தரப்பில்.

2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். முதலில் மூன்று மாதங்கள் மட்டுமே ஆணையத்துக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. ஆணையம் கூடுதல் அவகாசம் கேட்டதால், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்தது தமிழக அரசு. இந்நிலையில், ‘குறுக்கு விசாரணை இன்னும் முடிவடையாமல் இருப்பதாலும், ஆணையத்தில் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களில் குழப்பம் நிலவி வருவதாலும், விசாரணை முடிவுறவில்லை. எனவே, இன்னும் ஆறு மாதம் அவகாசம் வேண்டும்’ என ஆணையத்தின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு இப்போது மேலும் நான்கு மாத காலம் ஆணையத்துக்கு அவகாசம் வழங்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick