புளியைக் கரைக்கும் பூடான்! - 500 ரூபாயில் அதிக கள்ளநோட்டு... மீண்டும் பணமதிப்பிழப்பு... | Bhutan Bank announcement about India Demonetization - Junior Vikatan | ஜூனியர் விகடன்

புளியைக் கரைக்கும் பூடான்! - 500 ரூபாயில் அதிக கள்ளநோட்டு... மீண்டும் பணமதிப்பிழப்பு...

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் அனுபவித்த துயரங்களின் வடு இன்னும் நீங்காத நிலையில், மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளப்போகிறதோ என்ற அச்சத்தை விதைத்துள்ளது, பூடான் நாட்டின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு.

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியை இந்திய மக்களால் மறக்கவே முடியாது. அன்றைய தினம் ‘500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது’ என்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பால், இந்திய மக்கள் ஒவ்வொருவரின் மடியிலும் இருந்த பணம் செல்லாக்காசாகி, வெறும் காகிதங்களாகின. கறுப்புப் பணத்தையும், தீவிரவாதத்தையும் ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் பிரதமர் மோடி கூறினார். ஆனால், அவரது இந்த நடவடிக்கையைப் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் கடுமையாக விமர்சித்தனர். ‘‘இந்த நடவடிக்கையால் கறுப்புப்பணம் ஒழியாது, தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது’’ என்றனர். அவர்கள் சொன்னதுதான் உண்மை என்பதைத் தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டுவிடவில்லை. தொழில்துறையிலும், வர்த்தகத்திலும் அது ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் முழுமையாக விலகிவிடவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம், இந்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய மக்கள் மட்டுமல்ல... பூடான், நேபாளம் ஆகிய நாடுகளிலும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick