கழுகார் பதில்கள்!

ஜெ.முரளி, திண்டிவனம்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஏன் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்?

அவர் ஏன் போகிறார், என்ன நோக்கம் எனச் சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், அவர் சத்தமில்லாமல் சில விஷயங்களைச் சாதித்திருக்கிறார். கவர்னர் மாளிகையில் செலவைக் குறைத்து, அரசு நிர்வாகம் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியை உருவாக்கித் தந்திருக்கிறார். 2017 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் வித்யாசாகர் ராவ் பொறுப்பு கவர்னராக இருந்தார். தமிழகத்துக்கு அரிதாகத்தான் அவர் வருவார். என்றாலும், அந்த ஆறு மாதங்களில் கவர்னர் மாளிகையின் சமையல் செலவு 41.7 லட்ச ரூபாய். ஆனால், அதை 2017 அக்டோபர் முதல் 2018 மார்ச் வரையிலான ஆறு மாத காலத்தில் 9.2 லட்ச ரூபாயாகக் குறைத்திருக்கிறார் புரோஹித். அரசின் கூட்டுறவு அங்காடியில்தான் மளிகைப் பொருள்கள் வாங்குகிறார்கள். கவர்னர்கூட காசு கொடுத்தே கேன்டீனில் சாப்பிடுகிறார்.

அதேபோல வித்யாசாகர் ராவ் பொறுப்பில் இருந்த ஆறு மாதங்களில் போக்குவரத்து செலவு 80.5 லட்ச ரூபாய். சிலமுறைதான் அவர் தமிழகம் வந்தார். ஆனால், விமானப்படை விமானத்தில்தான் பறந்தார். அதற்குச் செலவானது. புரோஹித் பல இடங்களுக்குப் போகிறார். ஆனால், பயணிகள் விமானத்திலோ, ரயிலிலோதான் போகிறார். அதனால் செலவு 4.7 லட்சமாகக் குறைந்துள்ளது.

இந்தச் சிக்கனத்தைத் தமிழக அரசுக்கும் அவர் சொல்லிக்கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick