சிவன் பெயரில் ‘சதுரங்க வேட்டை’! - மெகா வசூலில் அரசியல் சாமியார்

‘சிதிலமடைந்த சிவாலயங்களைப் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்துகொடுக்கிறோம்’ என்று சொல்லி, ‘சதுரங்க வேட்டை’ பாணியில் தமிழகம் முழுவதும் மெகா வசூல் நடந்துவருகிறது. அதிர்ச்சி தரும் இந்த வசூல் வேட்டை பற்றிய விவரங்களுக்குள் போகும் முன்பாக, கடந்த ஆண்டு வாட்ஸ்அப்பில் வலம் வந்த இந்தத் தகவலை வாசித்துவிடுங்கள்...

‘சிவனடியார்களுக்கும், பொது மக்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள். தங்கள் ஊரில் சிதிலமடைந்த ஆலயங்கள்... ஒரு காலப் பூஜைகூட நடக்காத புதர் மண்டிய ஆலயங்கள்... குடமுழுக்கு நடைபெற்று பல வருடங்களாகி விட்ட ஆலயங்கள்... ஆலயங்களே இல்லாமல் நம் சிவம் மட்டும் வெட்டவெளியில் வெயிலிலும் மழையிலும் நனைந்துகொண்டு இருக்கும் நிலை... நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிவன், நந்தி, ஆவுடையார், லிங்கபாணம் என்று தனித்தனியாக இருக்கும் நிலை... இதெல்லாம் தங்கள் கண்ணில் பட்டால், உடனே இந்த (9791735016) அலைபேசி எண்ணுக்குத் தெரிவியுங்கள். சிதிலமடைந்த ஆலயங்களைப் புனர்நிர்மாணம் செய்து, ஆறு காலப் பூஜை என்றென்றும் நடைபெறச் செய்கிறோம். எங்கள் ‘அனுபூதி சமாஜம்’ இப்படி 150 சிவாலயங்களைக் கண்டெடுத்துப் புனர் நிர்மாணப் பணிகளைத் தொடங்கவுள்ளது’ என்று முடிகிறது அந்த வாட்ஸ்அப் தகவல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick