“பகவான் சார் இருந்தாதான் படிப்போம்!” - பாசத்துக்குரிய நல்லாசிரியர் | Govt School Students not allow their Teacher bhagavan to go transfer - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“பகவான் சார் இருந்தாதான் படிப்போம்!” - பாசத்துக்குரிய நல்லாசிரியர்

சிறந்த ஆசிரியர் ஒருவர் பள்ளியிலிருந்து இடமாறுதல் பெற்றுப் போகிறார் என்றால், சில மாணவர்கள் கண்ணீர் மல்குவார்கள்; சிலர் ஆசிரியருக்கு அன்பளிப்புக் கொடுப்பார்கள்; இன்னும் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், ஆசிரியர் பகவானுக்கு இவை எதுவுமே நடக்கவில்லை. மாறாக, அவரைப் பள்ளிக்குள் பிடித்து இழுத்துப் போனார்கள்; `அவர் போகக் கூடாது’ என்று போராட்டம் நடத்தினார்கள்; பெற்றோருடன் வந்து `டி.சி கொடுங்க, போறோம்’ என்று தலைமை ஆசிரியரின் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். பிஞ்சு மாணவனிலிருந்து பெரிய பிள்ளைகள் வரை கட்டிப்பிடித்து அழுததைப் பார்த்து ஆசிரியர் பகவானும் அழ, அந்த நெகிழ்ச்சியான தருணங்கள் ஊடகங்களில் பரவின. `இப்படியோர் ஆசிரியரா’ என்று தமிழகம் மட்டுமல்ல, தேசமே வியப்புடன் பார்த்தது.

திருத்தணியிலிருந்து 60 கி.மீ தூரத்தில் சோமேஸ்வரன் மலையடிவாரத்தில் இருக்கிறது வெளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளி. அங்கு சென்று ஆசிரியர் பகவானைச் சந்தித்தோம். ‘‘மாணவர்களுடன் நீங்கள் இருப்பதுபோல புகைப்படம் எடுக்க வேண்டும்’’ என்று நாம் சொன்னதும் தயங்கினார். ``பசங்க ஒண்ணு கூடிட்டாங்கன்னா திரும்பவும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவாங்க. `நான் நிச்சயமா போகலை’னு சமாதானம் சொல்லி வெச்சிருக்கேன்” என்றார் நம்மிடம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick