ஜூனியர் 360: தாதுமணல் கடத்தல்... அணு ஆயுத ஆபத்து! - அதிர வைக்கும் ஆவணங்கள்

மிழகத்தின் தென் மாவட்ட கடற்கரைப் பகுதியில் தாதுமணல்  கொள்ளை நடக்கிறது என்பது நீண்டகாலக் குற்றச்சாட்டு. தாதுமணல் என்ற பெயரில் அணுசக்தி உற்பத்திக்குத் தேவையான மோனசைட், வெளிநாடு களுக்குக் கடத்தப்படுகிறது என்ற புகாருக்கு இப்போது வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவை, நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனால், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் தாதுமணல் வழக்கு உச்சக்கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.    

தாதுமணல் விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள், அதிரடி ஆய்வுகள், வாதப்பிரதிவாதங்கள் ஆகியவை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்துவருகின்றன. இந்த நிலையில், ‘‘மோனசைட் கடத்தல் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இது, இந்தியாவின் பாதுகாப்புக்கே சவால் விடும் விஷயம். ஆனால், கீழிருந்து மேல்மட்டம் வரை பணம் பாய்வதால், இந்த விஷயத்தில் அரசு அமைப்புகளுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதுதான் உண்மை. எத்தனை கமிஷன்கள், எத்தனை விசாரணைகள் நடத்தி உண்மைகள் வெளிவந்தாலும், அவை மூடிமறைக்கப்படும் அபாயம் உள்ளது’’ என்று குமுறுகிறார்கள், இந்த விஷயத்தை ஆரம்பம் முதல் கவனித்துவரும் சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick