எய்ம்ஸ்-க்கு அடித்தளமிட்டது யார்? - அடித்துக்கொள்ளும் அரசியல்வாதிகள்

ளும் கட்சியிலுள்ள சிலரின் விளையாட்டால் மூன்று வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, ஒருவழியாக மதுரை தோப்பூரில்  தற்போது அமையப்போகிறது. இதற்கான நிலங்களை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான வேலைகள் நடந்துவரும் நிலையில், மதுரைக்கு எய்ம்ஸ் வருவதற்குத் தாங்கள்தான் காரணம் எனப் பல்வேறு கட்சியினரும் அக்கப்போர் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

எய்ம்ஸ் வருவதற்குத் தங்கள் கட்சிதான் காரணம் என்று சொல்லும் பி.ஜே.பி-யினரும், இதற்கு பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், நிர்மலா சீதாராமன் ஆகியோர்தான் காரணம் என்று கூறி வருகிறார்கள். பி.ஜே.பி-யைச் சேர்ந்த இன்னொரு தரப்பு, ‘செங்கிப்பட்டிக்கு எய்ம்ஸ் வர வேண்டும் என்று இல.கணேசன் விரும்பினார்’ என்று சொல்கிறது. பி.ஜே.பி-யின் மாநிலச் செயலாளரான பேராசிரியர் சீனிவாசனின் பங்களிப்பையும் பி.ஜே.பி-யினர் குறிப்பிடுகிறார்கள். சேம்பர் ஆஃப் காமர்ஸின் நிர்வாகியான ரத்தினவேலு தரப்பினர் தாங்கள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். சசிகலாவுக்காகச் செங்கிப்பட்டிக்கு எய்ம்ஸ் போகிறது என்ற தகவல் வந்தபோது வாயைத் திறக்காத தமிழக அமைச்சர்களும் எம்.பி-க்களும், மதுரைக்கு எய்ம்ஸ் வரத் தாங்கள்தான் காரணம் என்று பெருமைப்பட்டுக்கொள்வதை விநோதமாகப் பார்க்கிறார்கள் மதுரை மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick