“யாருக்கும் கிடைக்காத வெடிபொருள்கள்!” - அதிரவைத்த ஆயுதக் குவியல்

‘‘இயந்திரத் துப்பாக்கியில் பயன்படுத்தக் கூடிய 10,828 தோட்டாக்கள் சிக்கியுள்ளன. கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் 1971-ல் தயாரிக்கப்பட்டவை. முழுக்க முழுக்க ராணுவத்தினர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய இந்த வெடிபொருள்கள், ராணுவத்தைத் தவிர மற்ற பாதுகாப்பு அமைப்புகளுக்கு எளிதில் கிடைக்காதவை. வெடிகுண்டு வகைகள் குறித்து மற்ற போலீஸாருக்குப் பாடம் எடுக்கும் எங்களிடம்கூட இதுபோன்ற வெடிபொருள்கள் இல்லை” என்று அதிர்ச்சி விலகாமல் நம்மிடம் சொன்னார் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை அடுத்த அந்தோணியார்புரம் பகுதியில் மீனவர் எட்வின் தன் வீட்டின் பின்புறம் கழிவுநீர்த் தொட்டி அமைப்பதற்காகக் குழிதோண்டியுள்ளார். அப்போது, துப்பாக்கித்தோட்டாக்கள் அடங்கிய பெட்டிகள் கிடைத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.  அதையடுத்து, நவீன ரகத் துப்பாக்கிக்குண்டுகள், கையெறி குண்டுகள், எச்சரிக்கை வெடிகள், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் ஸ்லாப்புகள், ஃபியூஸ்கள் என ஏராளமான வெடிபொருள்கள் அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. இது, தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. இலங்கையில் செயல்பட்ட போராளிக் குழுக்களை, ஒரு காலத்தில் இந்திய அரசுதான் இயக்கியது என்பதற்கான சான்றாக இந்த ஆயுதக்குவியல் இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் பேசிக்கொள்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick