ஸ்டெர்லைட் நீதிக்கு எதிராக நிர்வாகம்!

ரவிக்குமார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் செய்துள்ள தவறுகள் ஒருபுறமிருக்க, உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மதிக்காமல் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர்களாக இருந்த அதிகாரிகள் செய்த தவறுகள்தான், அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்படுவதற்கும் போராடுவதற்கும் முதன்மையான காரணங்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை ஒன்றைத் தமிழக அரசு  வெளியிட்டது (G.O.(Ms) No. 72 dated: 28.05.2018) அதன்படி  மாவட்ட ஆட்சியர் அந்த ஆலையைப் பூட்டி சீலும் வைத்துள்ளார். ஆனால், ‘ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் எங்களுக்குத் திருப்தி இல்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குக் கொள்கை முடிவை அரசு எடுக்கவேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் இப்போது  அரசுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை உள்பட ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கைகள் யாவும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. அவர்கள் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால், இந்தப் பிரச்னையில், ஆட்சியாளர்களைவிடவும் அதிகார வர்க்கத்தினர் செய்துள்ள தவறுகளே அதிகம். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையை வழிமொழிந்துதான், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையே குறைபாடுகள் நிரம்பியதாக உள்ளது. அதனால்தான், இந்த அரசாணை பலவீனமாக இருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick