பலாப்பழம் முதல் ஏர் கூலர் வரை! - சட்டமன்ற ஜாலி காட்சிகள்

ஜெயலலிதா இருந்தவரைச் சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் வாய்மூடி மெளனிகளாக இருந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும், எதிர்க் கட்சியினருக்கு இணையாக வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் நிற்கிறார்கள். இதனால், கலாட்டாக்கள், கமெடிகள் எனக் கலகலப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது சட்டமன்றக் கூட்டத்தொடர்.

பலாப்பழம் பார்சல்!

சட்டசபையில் சில நாள்களுக்கு முன்பு தி.மு.க உறுப்பினர் ராஜேந்திரன், “எங்கள் பகுதியில் பலா மற்றும் முந்திரி அதிக அளவில் உற்பத்தியாகின்றன. அதற்கு ஏற்றவாறு அந்தப் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதற்கு, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், “உங்கள் பகுதியில் கிடைக்கும் பலா, முந்திரி உண்மையிலேயே சுவையுடையவைதான். அதனால், உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” என்று பதில் அளித்தார். அப்போது தி.மு.க உறுப்பினர் துரைமுருகன் எழுந்து, “நீராபானம் குறித்து அவையில் கேள்வி எழுந்தபோது, அனைத்து உறுப்பினர்களுக்கும் நீராபானம் வழங்கினார் பொள்ளாச்சி ஜெயராமன். அதேபோல், அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு பலாப்பழம் வழங்கினால் என்ன?” என்று கேட்டு அவையில் சிரிப்பலையை உண்டாக்கினார். ‘‘துரைமுருகன் பழம் சாப்பிட்டத் தயாரென்றால், கொடுப்பதற்கு நாங்கள் தயார்’’ என்று அமைச்சர் பென்ஜமின் பதில் அளித்தார். இந்த விவாதம் நடந்து 10 நாள்களைக் கடந்த நிலையில், அவையில் கொடுத்த வாக்குறுதியை பென்ஜமின் நிறைவேற்றி விட்டார். ஜூன் 26-ம் தேதி நடந்த காவல்துறை மானியக்கோரிக்கை நாளன்று, அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் உள்ள அவர்களின் அறைகளுக்குப் பலாப்பழங்களை அனுப்பினார் அமைச்சர் பென்ஜமின்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick