“பள்ளிகளை ஆரம்பிச்சீங்க சரி... ஆசிரியர்களை நியமிக்க வேணாமா?”

பழங்குடியினக் குழந்தைகளின் குமுறல்

மூக - பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பழங்குடியின சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக, உண்டு உறைவிடப் பள்ளிகளை ஆரம்பித்த தமிழக அரசுக்கு, அந்தப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது தெரியவில்லை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் உள்ள பர்கூர் மலைப் பகுதியில் பழங்குடி மக்கள் வசிக்கக்கூடிய 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. படிப்பு வாசனையே இல்லாத அந்த மக்கள், மலையில் தேன் எடுப்பது, கிழங்கு எடுப்பது, ஆடு மாடு மேய்ப்பது எனத் தங்கள் வாழ்க்கையை நடத்திவருகிறார்கள். இந்தச் சமூகத்தினரைக் கல்வியின் மூலம் முன்னேற்றுவதற்காகப் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி ஒன்று பர்கூர் மலையில் செயல்பட்டுவருகிறது. அதில், சுமார் 350 மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளி, 2010-ல் உயர் நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது முதல், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சமூக அறிவியல் பாடத்துக்கு ஆசிரியரே இல்லை. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 250 மாணவர்களுக்கு மொத்தமே நான்கு ஆசிரியர்கள்தான் உள்ளனர். இந்த நிலையில், 2016-ல் மேல்நிலைப் பள்ளியாக இது தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick