ஐஸ் பாக்கெட்டில் சாராயம்... கஞ்சா விற்பனை அமோகம்!

குமுறும் கும்பகோணவாசிகள்

“இது புனித நகரம். இதைக் கெடுக்கும் வகையில்  இங்கு கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது” என்று குமுறுகிறார்கள் கும்பகோணவாசிகள்.

“கும்பகோணத்திலும், கும்ப கோணத்தைச் சுற்றியுள்ள வலையப்பேட்டை, ஆடுதுறை, பட்டீஸ்வரம், மேலகாவேரி ஆகிய இடங்களிலும் சிலர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுகிறார்கள். முன்பு, காரைக்காலிலிருந்து கள்ளச்சாராயம் காய்ச்சி எடுத்து வந்து விற்றுவந்த இந்தக் கும்பல், இப்போது ஸ்பிரிட் பவுடரை மொத்தமாக வாங்கி வந்து கலந்து, பாக்கெட்களில் அடைத்து விற்கிறது. ரஸ்னா போன்ற பிரபலக் குளிர்பானங்களின் பெயர்களை அந்த பாக்கெட்களில் அச்சிட்டுள்ளார்கள். இங்கு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் அனைவரும், தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிராக ஓவராகக் குரல் கொடுக்கும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் கொடுமை.அதனால், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை” என்று போலீஸார் சிலர் நம்மிடம் புலம்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick