‘நீயெல்லாம் எப்படிடா எம்.எல்.ஏ ஆனே..!’ | Eight lane Green Corridor - Police atrocities - Junior Vikatan | ஜூனியர் விகடன்

‘நீயெல்லாம் எப்படிடா எம்.எல்.ஏ ஆனே..!’

சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை போலீஸ் மூலம் அடக்கப் பார்க்கிறது தமிழக அரசு.

பசுமைச் சாலை திட்டத்தை எதிர்த்துச் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஜூன் 26-ம் தேதி  விவசாயிகள் கறுப்புக்கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தினர். அதற்கு ஆதரவு தெரிவிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு, திருவண்ணாமலை மாவட்டத்துக்குச் சென்றார். போலீஸார், அவரைக் கைது செய்து குண்டுக்கட்டாக ஜீப்பில் ஏற்றினர். அப்போது, அவரை ஒருமையிலும் ஆபாசமாகவும் திட்டி போலீஸார் அராஜகத்தில் ஈடுபட்டதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick