மிஸ்டர் மியாவ் | mr.miyav - cinema news - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

பி
ரபல நடிகையைக் கடத்திப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்ட நடிகர் திலீப், மலையாள நடிகர்கள் கூட்டமைப்பான ‘அம்மா’விலிருந்து அப்போது நீக்கப்பட்டார். இப்போது அவரை மீண்டும் ‘அம்மா’ அமைப்பில் சேர்த்திருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் உள்பட சில நடிகைகள் ‘அம்மா’விலிருந்து விலகியுள்ளனர். கேரளாவை ஆளும் இடதுசாரிக் கூட்டணி இந்த நடிகைகளின் நியாயக் குரலுக்கு வலுச் சேர்த்துள்ளது. ஆனால், இடதுசாரிக் கட்சிகளில் இருக்கும் நடிகர்களான முகேஷ், கணேஷ்குமார் போன்றவர்கள் இந்த நடிகைகளை விமர்சனம் செய்துள்ளனர். இதனால், ‘‘கட்சி, இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்ற குரல் இப்போது வலுக்க ஆரம்பித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick