காவிரியில் பதுங்கிய கர்நாடகா... காரணம் என்ன? | Cauvery water issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

காவிரியில் பதுங்கிய கர்நாடகா... காரணம் என்ன?

காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் முதற்கூட்டம் டெல்லியில் மத்திய நீர் ஆணையம் அமைந்துள்ள சேவா பவனில் ஜூலை 2-ம் தேதி நடைபெற்றது. அதில், ஜூலை மாதம் கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்குமாறு ஆணையம் உத்தரவிட்டது.

காவிரி நதிநீர் வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் வழங்கிய இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு 14.75 டி.எம்.சி தண்ணீரைக் குறைத்துவிட்டது. ஏற்கெனவே ‘தமிழகத்துக்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்’ என்று காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், தமிழகத்துக்கு மாதா மாதம் வழங்க வேண்டிய தண்ணீரின் அளவும் குறிப்பிடப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் 14.75 டி.எம்.சி குறைக்கப்பட்டதால், அதற்கு ஏற்றபடி மாதாந்திரத் தண்ணீர் அளவை இந்தக் கூட்டத்திலேயே மாற்றியமைக்க முடிவு செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick