நிதி கொடுக்கும் எம்.எல்.ஏ... வாங்க மறுக்கும் அதிகாரிகள்!

மன்னார்குடி மல்லுக்கட்டு

ரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் ஆளும்கட்சி எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்ற பாகுபாடு பார்க்காமல், மக்கள் நலன் எது என்று பார்த்துச் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். ஆனால், மக்களின் அடிப்படை வசதிக்காக எதிர்க் கட்சியைச் சேர்ந்த ஓர் எம்.எல்.ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யும் பணத்தை அரசு அதிகாரிகள் நியாயமற்ற முறையில் புறக்கணிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தி.மு.க-வைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜா. இவரது தொகுதியில் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக இவர் ஒதுக்கும் நிதியைத்தான் அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய டி.ஆர்.பி.ராஜா, ‘‘மன்னார்குடி புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரையே இல்லை. மழையிலும் வெயிலிலும் மக்கள் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். இந்த பஸ் நிலையத்துக்கு மேற்கூரை அமைக்க, எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கித்தர முயற்சி செய்தேன். ஆனால், அதனை அதிகாரிகள் புறக்கணித்துவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick