19 மாதங்களாக நடக்கவில்லை உள்ளாட்சித் தேர்தல்... மக்களைச் சந்திக்க அச்சப்படும் எடப்பாடி அரசு! | Tamil Nadu Panchayat Election issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/07/2018)

19 மாதங்களாக நடக்கவில்லை உள்ளாட்சித் தேர்தல்... மக்களைச் சந்திக்க அச்சப்படும் எடப்பாடி அரசு!

ள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை நான்காவது முறையாக மேலும் ஆறு மாத காலத்துக்குத் தமிழக அரசு நீட்டித்திருக்கிறது. இதன்மூலம் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாகச் சொல்லிவிட்டது. எப்போதும் மோடியையே ட்விட்டரில் திட்டிக் கொண்டிருந்த ப.சிதம்பரம்கூட, முதல்முறையாக இதற்காகத் தமிழக அரசைக் கிண்டல் செய்துள்ளார். ‘உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை... தனி அதிகாரிகளே போதும் என்றால், தமிழக அரசை ஏன் மக்கள் பிரதிநிதிகள் நடத்த வேண்டும்? அமைச்சர்கள் பதவி விலகிக் குடியரசுத் தலைவரிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமே?’ என விளாசியிருந்தார் சிதம்பரம்.

2016 அக்டோபருடன் தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டது.  ‘இதோ நடத்துகிறோம்’, ‘விரைவில் நடத்துகிறோம்’, ‘நவம்பர் மாதத்துக்குள் நடத்துகிறோம்’, ‘பிப்ரவரி மாதத்துக்குள் நடத்திவிடுகிறோம்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் மாறி மாறிச் சொல்லிவருகின்றனர். இன்னும் உள்ளாட்சித் தேர்தல் வந்தபாடில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க