பொலிட்டிகல் பொடிமாஸ்! | Political Bit News - Junior vikatan | ஜூனியர் விகடன்

பொலிட்டிகல் பொடிமாஸ்!

உதயநிதிக்கு ‘ஓஹோ’ வரவேற்பு!

மூ
ன்று நாள் பயணமாக ஜூன் 30-ம் தேதி திருச்சி வந்தார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஜூலை 1-ம் தேதி நடைபெற்ற முன்னாள் அமைச்சர் அன்பில் பொய்யாமொழியின் சகோதரி மகன் கார்த்திகேயன்-வந்தனா திருமண விழாவில் மனைவி துர்கா,  மகன் உதயநிதி ஸ்டாலின் சகிதமாகக் கலந்துகொண்டார். ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட கட்அவுட், பேனர்களைக் காட்டிலும் உதயநிதிக்கு வைக்கப்பட்டிருந்தவைதான் அதிகம். ‘தலைவா’, ‘நாளைய தளபதியே’, ‘செயல் தலைவரின் தளபதியே’ என உதயநிதி ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களும், கட்அவுட்களும் திருச்சியைக் கலக்கின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick