‘ஸ்மார்ட் சிட்டி’க்காக ஊருக்கு வெளியே போகும் மார்க்கெட்!

திருச்சியில் 150 ஆண்டுகள் பழைமையான காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. திருச்சியின் மையப்பகுதியில் சுமார் 25 ஏக்கரில் காந்தி மார்க்கெட் அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசல், சரக்கு வாகனங்களின் நெருக்கடியால் இது சிக்கித் திணறுகிறது. இதை இடமாற்றம் செய்து, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிக்குடியில் அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.  கள்ளிக்குடியில் 10 ஏக்கரில், ரூ.77 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மார்க்கெட் கட்டடங்களை 2017 செப்டம்பர் 5-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்துவைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick