“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்!” | Sexual Harassment in Kerala by Priests - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/07/2018)

“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்!”

‘தேவன் அன்புள்ளவராகவும், இரக்கமுள்ளவராகவும், பாவங்களை மன்னிக்க ஆவலாகவும் இருக்கிறார்’ என்பது கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கை. ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என அறிவிக்கும் பைபிள், பாவ மன்னிப்பு என்ற வழியையும் காட்டியிருக்கிறது. ஆனால், பாவ மன்னிப்பு பெறப்போன ஒரு பெண்ணுக்கு அதுவே மீளமுடியாத நரகத்தை அளித்திருக்கும் கொடூரம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. 

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் அரசு உதவிபெறும் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்திருக்கிறார் அந்தப் பெண்.  திருவல்லா அருகிலுள்ள மல்லப்பள்ளியைச் சேர்ந்த அவர், திருமணத்திற்கு முன்பு பாதிரியார் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார். திருமணத்துக்குப் பின்பு அந்தக் குற்ற உணர்வு மனதிற்குள் உறுத்திக்கொண்டிருந்ததால், இரு குழந்தைகளுக்குத் தாயானபிறகு திருவல்லா மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சர்ச் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்கச் சென்றிருக்கிறார்.