55 நாள்களில் தாக்கப்பட்ட 70 போலீஸார்! - சென்னை என்கவுன்டர் பின்னணி

போலீஸார் மீதான தொடர் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக, சென்னையில் என்கவுன்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் ரவுடி ஆனந்தன். சென்னையில் தாதாக்களாக வலம் வந்துகொண்டிருந்த ‘பெருந்தலை’கள் கைதாகி சிறைக்குள் இருந்துவந்தாலும், இவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள தாதாக்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றுகிறார்கள். இவர்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதுபோல, போலீஸையும் அச்சுறுத்துகிறார்கள். ‘‘தமிழ்நாடு முழுவதும் கடந்த 55 நாள்களில் மட்டும், 70 போலீஸார்மீது இந்த குட்டி தாதாக்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்’’ என்கின்றனர் போலீஸ் தரப்பில். இவற்றில் சில சம்பவங்களே வழக்குகளாகப் பதிவாகியுள்ளன.

தலைமைச் செயலகக் காலனி போலீஸார் எட்டுபேர் மீது கல்வீசித் தாக்குதல் நடைபெற்றது. மேலும் மவுன்ட் உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ்சேகர், வேப்பேரி சிறப்பு எஸ்.ஐ.சம்பத், மெரினாவில் வாகன சோதனை மேற்கொண்ட முதல்நிலைக் காவலர் மாரிக்கண்ணன் ஆகியோர்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வழிப்பறிக் கொள்ளையர்களை விரட்டிப்போன செம்பியம் உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், வேப்பேரி போக்குவரத்துக் காவலர் விஜயகுமார், பூந்தமல்லி ஏட்டு அன்பழகன் ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick