அப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்! | Arumugasamy Commission Enquiry about Jayalalitha death - Junior Vikatan | ஜூனியர் விகடன்

அப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

ஜெ-வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதைந்திருக்கும் மர்மங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம். ‘சசிகலா குடும்பத்தினரைக் குற்றவாளியாக்கும்விதமாக ஆணையம் செயல்படுகிறது’ என புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், ஆணையத்தின் விசாரணை அப்போலோ மருத்துவமனையை சிக்கவைக்கப் பார்க்கிறது. ‘தோண்டத் தோண்டப் புதையல்’ போல இந்த விசாரணையில் புதுப்புது பூதங்களாகப் புறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இதில் லேட்டஸ்ட் பூதம்... ஜூலை 4-ம் தேதி ஆணையத்தில் ஆஜரான அப்போலோ மருத்துவமனை டாக்டர் சினேகாஸ்ரீ தந்த வாக்குமூலம். 2016 செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனுக்குச் சென்று, ஜெயலலிதாவை அழைத்துவந்த ஆம்புலன்ஸில் அவருடன் வந்தவர் சினேகாஸ்ரீ. ‘‘போயஸ் கார்டன் வீட்டுக்கு நாங்கள் சென்றபோது, ஜெயலலிதாவை சேரில் அமர்த்தியிருந்தனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்தார். முதலுதவி ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றினோம். சசிகலாவும் டாக்டர் சிவக்குமாரும் உடன் வந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு வரும்வரை ஜெயலலிதா மயக்க நிலையிலேயேதான் இருந்தார்’’ என்று சினேகாஸ்ரீ வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick