முதல்வர் ஊழலை விசாரிக்குமா லோக் ஆயுக்தா?

வேறுவழியே இல்லாமல் சில சமயங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தமிழக அரசு ஆளாகும். அப்படி இப்போது லோக் ஆயுக்தா அமைப்பு வரப் போகிறது. 

‘ஊழலை ஒழிப்பதற்கு என்று மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்’ என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின்போது தொடர் போராட்டங்கள் நடத்தினார். அதன் விளைவாக, ‘லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா 2013’ என்ற சட்டத்தை மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றியது. ஆனால், அந்தச் சட்டத்தின் அடிப்படையில் லோக்பால் அமைப்பை மத்திய அரசு இன்னும் உருவாக்கவில்லை. கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஏற்கெனவே லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி அதற்கான அமைப்பை ஏற்படுத்திவிட்டன. ஆனால், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படவில்லை; அமைப்பும் உருவாக்கப்படவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick