பசுக்களைக் காப்பாற்ற... கர்ப்பிணிகளை பலிகடா ஆக்கலாமா?

ரு மருந்து இருக்கிறது. விலை மிகவும் குறைவு. பிரசவ நேரத்தில் ஏற்படும் ரத்த இழப்பைத் தடுத்து, கர்ப்பிணிகளின் உயிரைக் காக்கும் மருந்து இது. இதை, தறிகெட்டவிதமாகப் பயன்படுத்துகிறார்கள். பசுமாடுகளுக்கு இந்த மருந்தை ஊசியாகச் செலுத்தினால், நிறையப் பால் சுரக்கும். காய்கறிகளில் இதைச் செலுத்தினால் அவை பெரிய அளவில் வளரும். ஆனால், இந்தப் பாலைக் குடித்தாலும் காய்கறிகளைச் சாப்பிட்டாலும் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். இதைத் தடுக்க, இந்த மருந்தை இறக்குமதி செய்யவும், தனியார் நிறுவனங்கள் தயாரிக்கவும் தடை விதித்தது மத்திய அரசு. ஆனால், ‘பசுக்களைக் காப்பாற்றுவதற்காகக் கர்ப்பிணிகளைப் பலிகடா ஆக்கலாமா?’ என்ற கூக்குரல் எழுந்துள்ளது.
அந்த மருந்தின் பெயர், ஆக்சிடோசின். இது இயற்கையாகவே பெண்களின் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோன். பிரசவத்தின்போது தாயின் கர்ப்பப்பையைச் சுருங்கச் செய்வதற்கும், தாய்ப்பால் சுரக்க வைப்பதற்கும் காரணமாக இருப்பது உடலில் இயற்கையாகவே சுரக்கும் ஆக்சிடோசின். இந்த ஆக்சிடோசின், ஒரு மருந்தாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick