ரூ.1,500 கோடி ஊழல்! - சி.பி.ஐ விசாரணையில் ரயில்வே தொழிற்சங்கம்?

யில்வே தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற் சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா உள்ளிட்டோர் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பல்லாயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு ரயில்வே தொழிலாளர்களின் நலனுக்காக ‘தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் கூட்டுறவுக் கடன் சங்கம்’ ஆரம்பிக்கப்பட்டது. இது திருச்சி மற்றும் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில், எஸ்.ஆர்.எம்.யூ (தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன்) நிர்வாகிகள் உள்ளனர். இவர்கள் இந்தக் கூட்டுறவு சங்கத்தின் நிதியில் ஊழல் செய்துள்ளதாக, பகீர் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து டி.ஆர்.இ.யூ (தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்) துணைப் பொதுச் செயலாளர் மனோகரனிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick