தளபதிக்கு எதிராகக் கொடிபிடிக்கும் தங்கவேலன்!

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க-வை 35 ஆண்டுகளாகத் தன் இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் சுப.தங்கவேலன். இப்போது மாவட்டச் செயலாளர் மாற்றத்தில் அவருக்கு ஸ்டாலின் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.  இதைத் தாங்கமுடியாத தங்கவேலன், அறிவாலயத்துக்கே சென்று ஸ்டாலினின் நடவடிக்கைக்கு எதிராகக் கொடி பிடித்திருக்கிறார்.

அண்ணாவால் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரமக்குடி தொகுதியில் களம் கண்டவர். பறக்க முடியாத இடங்களிலும் தன் துணிச்சலால் தி.மு.க கொடியைப் பறக்க விட்டவர் என்ற பெயர் எடுத்தவர் முன்னாள் அமைச்சரான சுப.தங்கவேலன். ராமநாதபுரம் தொகுதி எம்.பி-யாக இருந்த எம்.எஸ்.கே.சத்தியேந்திரனின் மறைவுக்குப்பின் மாவட்ட தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கவேலனோ, அவரின் மகன்களோதான் மாவட்டச் செயலாளர்களாக இருந்து வந்துள்ளனர். இதனால் ராமநாதபுரம் தி.மு.க-வில் தங்கவேலன் வைப்பதே சட்டமாக இருந்துவந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick