“டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்கு செல்லாது!”

சுட்டிக்காட்டிய கிரண் பேடி... அப்செட்டான நாராயணசாமி

‘‘யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் அதிகம்’’ என்று ஜூலை 4-ம் தேதி தீர்ப்பு தந்தது உச்ச நீதிமன்றம். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலைவிட இந்தத் தீர்ப்பால் அதிகம் உற்சாகம் அடைந்தவர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிதான். துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் குடைச்சல்களால் அந்த அளவுக்கு நொந்து போயிருந்தார். ‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று நிம்மதியாகத் தூங்கலாம்’ என்று நாராயணசாமி நினைத்திருந்த நிலையில், ‘ஆளுநர் அதிகாரம் தொடர்பாக டெல்லிக்கு அளித்திருக்கும் தீர்ப்பு புதுச்சேரிக்குப் பொருந்தாது’ என்று உச்ச நீதிமன்றம் அதே தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருப்பது புதுச்சேரி அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

2016-ம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை கிரண்பேடியும், நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையும் குழாயடிச் சண்டையே மேல் என்ற அளவுக்கு அதிகார மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick