தூத்துக்குடி மக்களை மூளைச்சலவை செய்தது யார்?

தின்மூன்றுபேரின் உயிரைக் குடித்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்ந்து ஒரு மாதம் கடந்த நிலையில், அந்த வன்முறைக்கு ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர்தான் காரணம் என்று தூத்துக்குடி மீனவ மக்களில் சிலரும், தூத்துக்குடியை ஒட்டிய ஒரு கிராமத்தினரும் புகார் கிளப்பியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி தூத்துக்குடி மக்கள் பேரணி நடத்தினர். அப்போது, மக்கள்மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் வீடு புகுந்து போலீஸார் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தது. இப்போதும், போலீஸார் தங்களை அச்சுறுத்திவருவதாக தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து புகார் எழுப்பிவருகின்றனர். இந்த நிலையில், ‘‘தூத்துக்குடி வன்முறைச் சம்பவத்துக்கும் மீனவ மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர்தான், இளைஞர்களை மூளைச்சலவை செய்து, உணர்வுகளைத் தூண்டிப் போராட்டத்தில் பங்கேற்கச் செய்தனர்’’ என்று மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரிடம் மீனவர்கள் சிலர் மனு அளித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick