பெங்களூரு TO சிரியா... தீவிரவாதிகளிடம் விற்க திருமணம்?

ஸ்லாத்துக்கு மதம் மாறி ஹாதியா திருமணம் செய்துகொண்டபோது, ‘லவ் ஜிகாத்’ என்ற விஷயம் தலைப்புச் செய்தி ஆனது. இப்போது, மீண்டும் இது பரபரப்பு விஷயமாகியுள்ளது. காரணம், 25 வயது பெண் கொடுத்திருக்கும் புகார்மீது தேசியப் புலனாய்வு அமைப்பினர் நடத்தும் விசாரணை.

குஜராத்தில் வசிக்கும் கேரளப் பெண் அவர். பெங்களூருக்கு அனிமேஷன் படிக்க வந்த அந்தப் பெண்ணுக்கு கேரளாவைச் சேர்ந்த முகமது ரியாஸ் ரஷித் என்ற முஸ்லிம் இளைஞருடன் காதல். 2014-ல் காதலிக்க ஆரம்பித்த இவர்கள், 2016-ல் திருமணம் செய்துகொண்டனர். முஸ்லிமாக மதம் மாறினார் அந்தப் பெண். ரியாஸின் பெற்றோர் சவூதி அரேபியாவில் வசிக்கின்றனர். அதனால், அங்கு சென்றனர் இருவரும். 2017 ஆகஸ்ட்டில் ஜெட்டா நகருக்குச் சென்ற இந்தத் தம்பதி அங்கு சில மாதங்கள்கூட இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick