திருப்பூர் ஜவுளித் தொழிலதிபர்களை ஏமாற்றும் வட இந்திய வியாபாரிகள்!

னக்குத் தரவேண்டிய கடனைக் கேட்கச் சென்ற திருப்பூர் ஜவுளி ஆலை அதிபர் ஒருவர்மீதும், அவரின் நண்பர்கள்மீதும் ராஜஸ்தானில் ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம், திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதியில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக ஜவுளி உற்பத்தி இருந்துவருகிறது. இந்தத் துறையில், கடந்த சில வருடங்களாக வட இந்தியர்களும் காலூன்ற ஆரம்பித்துள்ளனர். வட இந்திய வியாபாரிகள், இங்குள்ள ஜவுளி உற்பத்தியாளர்களிடம் ஜவுளியைக் கொள்முதல் செய்து வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கொள்முதல் செய்த ஜவுளிகளுக்கான தொகையைக் கொடுக்காமல், தங்களது சொந்த மாநிலங்களுக்குச் சிலர் எஸ்கேப் ஆகிவிடுவதாகப் புகார் எழுந்துள்ளது. அப்படி ஏமாற்றிவிட்டு ராஜஸ்தான் சென்றுவிட்ட ஒருவரிடம் பணம் கேட்கச் சென்ற கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் மீதுதான் கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick