‘உலகம் அழிவதற்குமுன் செத்துவிடுங்கள்!’ - பரிதாப தற்கொலைகள்

விடுதலை என்பது என்ன? ‘உடல் எனும் கூட்டிலிருந்து ஆன்மாவை வெளியேற்றுவதுதான் விடுதலை’ என்று சொல்லி, ஒரே குடும்பத்தில் 11 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போயிருக்கிறார்கள்.

டெல்லியின் புராரி பகுதியில் நடந்த இந்தத் தற்கொலை சம்பவம், இந்தியா முழுக்கப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது நல்ல வசதியான, மகிழ்ச்சியான கூட்டுக் குடும்பம். நன்கு படித்தவர்களும்கூட! தற்கொலை செய்துகொண்ட அன்றைய தினம்வரை எல்லோரிடமும் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். யாரும் மனநோயாளிகள் போலத் தெரியவில்லை. மாந்திரீகம், தாயத்து என வெறிபிடித்தும் அலையவில்லை. தினமும் மூன்று வேளை சாமி கும்பிட்டு, காயத்ரி மந்திரமும் ஹனுமன் சாலிசாவும் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இப்படி முடிவெடுத்தால், அதிர்ச்சி ஏற்படும்தானே! அதிலும், அவர்கள் தற்கொலை செய்து கொண்டவிதம் பெரும் புதிராகவே இருக்கிறது.

நாராயணி தேவி என்ற 77 வயது பெண்மணியும், அவரின் மகன்கள், மகள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் 10 பேரும்தான் இறந்தவர்கள். பேத்தியான ப்ரியங்கா ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஜூன் 17-ம் தேதிதான் இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. ஜூன் 30-ம் தேதி தன் வருங்காலக் கணவரிடம் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தவர், அடுத்த சில மணி நேரத்தில் குடும்பத்துடன் சேர்ந்து தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick