செலவை மிச்சம் செய்ய... அமைச்சர்களே கார் ஓட்டுவார்களா? | Tamil Nadu Government Buses without Conductor - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/07/2018)

செலவை மிச்சம் செய்ய... அமைச்சர்களே கார் ஓட்டுவார்களா?

யார் நடத்துகிறார்கள் என்பதே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்த அரசுதான், ‘நடத்துநரே இல்லாமல் பேருந்தை ஓட்டலாம்’ என்ற ஒரு முடிவையும் எடுத்திருக்கிறது.

515 புதிய அரசு சொகுசுப் பேருந்துகளை ஜூலை 3-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பல நவீனத் தொழில்நுட்பங்களுடன், குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, கழிப்பறை வசதியுடன் கூடிய சொகுசுப் பேருந்துகள் தற்போது தமிழகத்தில் ஜம்மென்று வலம்வருகின்றன. இதில், ‘தொலைதூரங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நடத்துநர் இல்லாமல் இடைநில்லாப் பேருந்தாக (End to End) இயக்கப்படும்’ என அறிவித்திருக்கிறார்கள். அதாவது, பேருந்து நிலையத்தில் பயணிகள் ஏறியதும், நடத்துநர் டிக்கெட் கொடுத்துவிட்டுப் பேருந்திலிருந்து இறங்கிவிடுவார். அதன்பிறகுப் பேருந்தின் கதவு சாத்தப்பட்டால், இடையில் எங்குமே கதவு திறக்கப்படாது. இடையில் பயணிகளும் ஏற்றப்படமாட்டார்கள்.