9 ஐ.ஏ.எஸ்-கள்... 2 அமைச்சர்கள்! - ரெய்டில் சிக்கிய திமிங்கிலங்கள் | IT raid on Christy Friedgram Industry - Junior Vikatan | ஜூனியர் விகடன்

9 ஐ.ஏ.எஸ்-கள்... 2 அமைச்சர்கள்! - ரெய்டில் சிக்கிய திமிங்கிலங்கள்

ந்தியாவின் மெகா வருமானவரி ரெய்டுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது, கிறிஸ்டி நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டு. இந்தியா முழுக்க 100-க்கும் மேற்பட்ட இடங்கள்... ஐந்து நாள்களையும் தாண்டி நடைபெறும் சோதனைகள்... ரகசிய விசாரணைகள்... மூட்டை மூட்டையாக ஆவணங்கள் என கிறிஸ்டி மற்றும் அதன் துணை நிறுவனங்களைக் கிடுக்கிப்பிடி போட்டு வளைத்திருக்கிறது வருமானவரித் துறை. விவசாயமே செய்யாமல் பருப்பும், கோழிப்பண்ணையே இல்லாமல் முட்டையும், நகைக்கடையே இல்லாமல் தாலிக்குத் தங்கமும் சப்ளை செய்யும் டெண்டர்களை எடுத்துக் கோடிகளைக் குவித்திருக்கும் இந்த நிறுவனம், பல்வேறு கட்டுமான கான்ட்ராக்ட்களையும் பெற்றிருப்பது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. தமிழக அரசியல்வாதிகளை மட்டுமின்றி, வெளி மாநில அரசியல்வாதிகளையும் மிரளவைத்துள்ளது இந்த ரெய்டு. இந்த நிறுவனத்தினர் பல மாநிலங்களின் ஆட்சியாளர்களை பணபலத்தின் மூலம் வளைத்து, அரசுகளிடம் பல நூறு கோடி ரூபாய்க்கு உணவு வர்த்தகம் செய்துள்ளனர். இந்த நிறுவனங்களால் மறைமுக ஆதாயம் பெற்ற அனைவரும் இப்போது திகிலில் இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick