தமிழ்முறை குடமுழுக்கு... தடைபோடும் அதிகாரிகள்!

‘‘இதுவரை இரண்டு கோயில்களில் தமிழ்முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடிக் குடமுழுக்கு செய்துள்ளோம். ஏற்கெனவே தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்த சிவன் கோயிலுக்கு, இப்போதும் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்ய விரும்பும் எங்களின் முயற்சிக்கு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்’’ என்று குமுறுகிறார்கள் திருமக்கூடலூர் மக்கள்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ளது திருமக்கூடலூர். இந்தக் கிராம மக்கள், கோயில் குடமுழுக்கு, திருமண நிகழ்ச்சிகள், புதுமனை புகுவிழா என மங்கல நிகழ்வுகளைத் தமிழ்முறைப்படியே நடத்துகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயர்களையே வைத்து அசத்துகிறார்கள். இந்தக் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 500 வருடங்கள் பழமையான மணிமுத்தீஸ்வரர் சிவன் கோயிலுக்கு, 2002-ம் ஆண்டு தமிழ்முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடிக் குடமுழுக்கு செய்தனர். சில தினங்களுக்கு முன்பு, இதே கிராமத்தில் இருக்கும் ஸ்ரீபகவதி அம்மன் கோயிலையும் புனரமைத்து, தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்துள்ளனர். “மணிமுத்தீஸ்வரர் கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்து 16 வருடங்கள் ஆகிவிட்டதால், மறுபடியும் குடமுழுக்கு செய்ய முயற்சி செய்கிறோம். இதற்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்” என்று கிராம மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick