“இது முதுகெலும்பு இல்லாத அரசு!” - முகிலன் காட்டம்

ணு உலை எதிர்ப்பு, காவிரிப் பாதுகாப்பு, ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிர்ப்பு, தாதுமணல் கொள்ளைக்கு எதிர்ப்பு என எல்லாப் போராட்டக் களங்களிலும் வீரியத்துடன் நின்றவர் முகிலன். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்மீது ஏராளமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 2017 செப்டம்பர் 18-ம் தேதி  கூடங்குளம் போலீஸார் முகிலனைக் கைதுசெய்தனர். தன்மீதான வழக்குகளுக்கு ஜாமீன் கேட்காமல், கடந்த 10 மாதங்களாக பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகிலன், ஜூலை ஒன்றாம் தேதி  திடீரென மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு தனிமைச் சிறையில் அடைத்து வைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில், முகிலனிடம் அவரின் வழக்கறிஞர் சரவணகுமார் மூலம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவற்றுக்கு முகிலன் அளித்த பதில்கள் இதோ...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick