புறம்போக்கு நிலத்தில் பள்ளிக்கூடம்... சான்று வழங்கிய அதிகாரிகள்!

கும்பகோணம் தீ விபத்து: ஜூலை 16, 2004

தீயின் நாக்குகளுக்கு 94 பச்சிளம் பள்ளிச் சிறார்கள் பலி கொடுக்கப்பட்டதன் ரணம்... 14 ஆண்டுகளைக் கடந்தபின்னும் ஆறவில்லை. 2004-ம் ஆண்டு ஜூலை 16, கும்பகோணம், ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் நடந்த அந்தக் கொடூரத்துக்கு, ‘பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமல் கட்டடங்கள் கட்டப்பட்டதே காரணம்’ என்று சாட்டையடி தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். 14 ஆண்டுகள் உருண்டுவிட்ட பின்னரும்கூட இந்த அரசாங்கம், கல்வித்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் என யாரும் குழந்தைகளின் உயிர்மீது அக்கறை கொள்ளவே இல்லை என்பதுதான் நிஜம். ஒரு சோற்றுப் பதமாகப் பயமுறுத்துகிறது, சென்னை அருகே பாடிக்குப்பத்தில் உள்ள ஸ்ரீவிவேகானந்தா வித்யாசாலை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

‘‘பள்ளி வளாகத்தின் ஒவ்வோர் அங்குலமும் விதிமீறல்களைச் சுமந்து நிற்கிறது. இதையெல்லாம் சுட்டிக்காட்டிப் போராடிக் கொண்டிருக்கிறேன். நீங்களாவது குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்’’ என்றபடி சமூக ஆர்வலர் பாலாஜி நம்மைத் தொடர்புகொள்ள, விசாரணையில் இறங்கினோம்.

இதைப் பற்றிப் பேசும் பாலாஜி, ‘‘ஒரே பெயரில் கதவு எண் 73 மற்றும் 40 என இரு இடங்களில் இந்தப் பள்ளிக்கூடம் செயல்படுகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த இரண்டு கட்டடங்களும் சுமார் 50 மீட்டர் இடைவெளியில் இருக்கின்றன. இரண்டு கட்டங்களுக்கு இடையே சாலை இருக்கிறது. அகலம் 20 அடி என்றாலும், ஆக்கிரமிப்புகள் இருப்பதால், ஆறு அடிதான் புழக்கத்தில் உள்ளது. ஏதாவது ஆபத்து என்றால், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வேன்கள் இந்த வழியாக வருவது கஷ்டம். கதவு எண் 40-ல் கட்டப்பட்டுள்ள கட்டடம், மழைநீர்க் கால்வாய் கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது. டி.விஜயலட்சுமி மற்றும் எஸ்.விஜயலட்சுமி என இரண்டு நபர்கள் போல் கணக்குக்காட்டி அனுமதி வாங்கியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick