ஊழலிலிருந்து தப்பிக்க ஒரு சட்டம்... - அட்டகத்தி லோக் ஆயுக்தா!

‘ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பைக் கொண்டுவர வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்ததால், வேறு வழியில்லாமல் அவசர அவசரமாக தமிழக சட்டப்பேரவையில் ஜூலை 9-ம் தேதி நிறைவேற்றப்பட்டது லோக் ஆயுக்தா மசோதா. ஆனால், ‘ஊழல் செய்பவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான எல்லா வழிமுறைகளையும் கொண்டு இந்த மசோதா வந்துள்ளது’ என்று குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். ‘உள்ளாட்சி அமைப்புகள், அரசின் ஒப்பந்தங்கள், பணி நியமனம், அரசின் பணிமாறுதல்கள் உள்ளிட்டவற்றை லோக் ஆயுக்தா விசாரிக்க முடியாது’ என்று அரசு சொல்லியிருக்கிறது. இதன் மூலம், ‘இதிலெல்லாம் ஊழல் நடக்கிறது. அதையெல்லாம் லோக் ஆயுக்தா விசாரணையின்கீழ் கொண்டுவர மாட்டோம்’ என்பதை தமிழக அரசு தெரியப்படுத்தி விட்டது.

லோக் ஆயுக்தா என்ற அமைப்புக்கு முன்னோடி, கர்நாடக மாநில லோக் ஆயுக்தா. அங்கு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஜனதா கட்சி, 34 ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகா லோக் ஆயுக்தா சட்டத்தை 1984-ம் ஆண்டு நிறைவேற்றியது. அது 1986-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்தா விசாரணை செய்து நடவடிக்கைக்குப் பரிந்துரைக்க முடியும். குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் வீடுகளில், அலுவலகங்களில் சோதனை நடத்தும் அதிகாரமும் அந்த அமைப்புக்கு உண்டு. அதன்பின்னர் கர்நாடகாவில் பல சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக சந்தோஷ் ஹெக்டேவுக்குப் பின்னர் அந்த மாநில லோக் ஆயுக்தாவும் பல் பிடுங்கப்பட்ட பாம்பாகத்தான் இருக்கிறது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick