ஸ்வீட் சாப்பிட்டதால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதா? | Arumugasamy Commission Enquiry about Jayalalitha death - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஸ்வீட் சாப்பிட்டதால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதா?

ஆணையத்தின் விசாரணையில் அம்பலம்

“சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவருமே வங்கியில் கடன் பெற்றே கார் வாங்கினார்கள்” என்ற தகவலை ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியமாக அளித்துள்ளார் வங்கி மேலாளர் மகாலட்சுமி.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறதா என விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜூலை 9-ம் தேதி அப்போலோ மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால், மருத்துவர் சாந்தாராம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளராக இருந்து ஓய்வுபெற்ற மகாலட்சுமி ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்துார் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ, தினகரன் தரப்பில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோ அப்போலோவில் எடுக்கப்பட்டதில்லை என்ற ஒரு செய்தியும் உலவி வந்தது. அதனால் அந்த வீடியோவின் உண்மைத் தன்மையை அறியும் வகையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையில் கேள்விகளை எழுப்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick